BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தங்கம் விலை உயர்வால் விற்பனை % சரிவு: ஒரு பவுண் லட்சத்தைத் தாண்டியது - நகைக்கடை உரிமையாளர்கள் கவலை!

தங்கம் விலை உயர்வால் விற்பனை % சரிவு: ஒரு பவுண் லட்சத்தைத் தாண்டியது - நகைக்கடை உரிமையாளர்கள் கவலை!

இலங்கையில் தங்க ஆபரணங்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு காரணமாக, நகை விற்பனைத் துறையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற காரணிகளால், உள்நாட்டிலும் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது குறித்து அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், தங்கத்தின் அதீத விலை உயர்வால் வாடிக்கையாளர்களின் கொள்வனவு திறன் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக விற்பனை 25 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 8, 2026), இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் (8 கிராம்) 4,05,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது சுமார் 7,000 ரூபாய் உயர்வாகும். இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலையும் 3,70,000 ரூபாயைக் கடந்து பதிவாகியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். திருமணக் காலங்களில் கூட தங்க நகைகளுக்கான கேள்வி குறைந்துள்ளமை இத்துறை சார்ந்தவர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"