BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை மீள ஆரம்பம்: அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் அனுமதி!

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை மீள ஆரம்பம்: அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் அனுமதி!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை, இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சேவையானது மிகவும் அத்தியாவசியத் தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை முழுமையாகச் சீர்செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் (Counter Services) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், பொதுமக்களுக்கான அனைத்துச் சேவைகளும் வழமை போன்று எந்தவிதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படும் எனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"