BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்: கொத்து, பிரைட் ரைஸ் விலை உயர்வு - சிற்றுண்டி விலை குறைப்பு!

உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்: கொத்து, பிரைட் ரைஸ் விலை உயர்வு - சிற்றுண்டி விலை குறைப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் கொத்து (Kottu) மற்றும் பிரைட் ரைஸ் (Fried Rice) ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிவாயு விலையேற்றம் மற்றும் ஏனைய மூலப்பொருட்களின் செலவு அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.


இருப்பினும், நுகர்வோருக்குச் சாதகமான செய்தியாக, பணிஸ் (Buns) உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் (Shorties) விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிகளுக்கான கேள்வி மற்றும் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"