BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

தனமல்விலவில் வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்!

தனமல்விலவில் வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்!

தனமல்வில, குடா ஓயா பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 49 வயதுடைய நபர் ஒருவரை, எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதவான் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (04.04.2026) உத்தரவிட்டுள்ளது. குடா ஓயா, பலஹருவ வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தனமல்வில தலைமையக பொலிஸில் அளித்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


சந்தேகநபர் அப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனமல்வில தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டாரவின் வழிகாட்டலில், பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"