BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

வத்தளையில் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சி!

வத்தளையில் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சி!

வத்தளை, மபோலா, துவவத்த பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் மெழுகுத் துணி உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று (06.04.2026) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, கொழும்பு தீயணைப்புத் திணைக்களம் விரைந்து செயற்பட்டு, தீயை அணைக்கும் பணிகளுக்காக 3 தீயணைப்பு வாகனங்களையும் 13 அதிகாரிகளையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.


தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மற்றும் மெழுகு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன. தற்போது வரை தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இவ்விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"