BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

எரிபொருள் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கம்: புதன்கிழமை விடுமுறை மற்றும் முறைமை குறித்து விஜித ஹேரத் அறிவிப்பு!

எரிபொருள் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கம்: புதன்கிழமை விடுமுறை மற்றும் முறைமை குறித்து விஜித ஹேரத் அறிவிப்பு!

மாத்தறையில் நேற்று (05.04.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாட்டின் எரிபொருள் விநியோகம் மற்றும் தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய விளக்கங்களை அளித்தார். மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை பொது விடுமுறை, QR குறியீடு முறை மற்றும் வாகனங்களின் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறை ஆகியன குறுகிய காலத் தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.


தற்போது எரிபொருள் வரிசைகள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. விநியோகக் கட்டமைப்பு முழுமையாகச் சீரடைந்தவுடன், புதன்கிழமை விடுமுறை முறைமை நீக்கப்பட்டு நாட்டின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார். தற்போது QR முறைமை வினைத்திறனாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"