BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

மட்டக்களப்பு வாகரையில் பயங்கரம்: மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன் - பிள்ளைகளின் தாய் படுகாயம்!

மட்டக்களப்பு வாகரையில் பயங்கரம்: மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன் - பிள்ளைகளின் தாய் படுகாயம்!

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவில் உள்ள ஆற்றங்கரை வீதி, புச்சாக்கேணி பகுதியில் நேற்று (30.03.2026) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து, தாயாருடன் வசித்து வந்த 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார். தோணிதாட்ட மடு பகுதியில் வசித்து வந்த கணவர், தனது மனைவியைப் பழிவாங்கும் நோக்குடன் கட்டுத் துப்பாக்கியுடன் வந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, தாக்குதலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கியுடன் தப்பியோடியுள்ள கணவரைக் கைது செய்ய வாகரை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"