BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு கிணறு சம்பவம்: உயிர் தப்பிய பெண்ணின் வாக்குமூலம்

மட்டக்களப்பு கிணறு சம்பவம்: உயிர் தப்பிய பெண்ணின் வாக்குமூலம்

மட்டக்களப்பு, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றில் வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 26 வயது இளந்தாய், தனக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் குறித்துப் பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளார். கடந்த 20-ஆம் திகதி வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இவரை, வெறும் 100 ரூபாய் கட்டணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு முச்சக்கரவண்டிக் கும்பல் ஏற்றியுள்ளது. நகருக்குச் சென்ற அவர், நகைக்கடை ஒன்றில் அடகு வைத்திருந்த தனது தங்க மோதிரத்தை 24,000 ரூபாய் செலுத்தி மீட்டுள்ளார். இதனை அவதானித்த கும்பல், திட்டமிட்டு அவருக்கு மயக்க மருந்து கலந்த விளாம்பழக் குளிர்பானத்தைக் கொடுத்துள்ளது. பின்னர், மாட்டிற்குப் புல் வெட்டுவதாகக் கூறி கத்தியுடன் ஏறிய ஒரு இளைஞனுடன் சேர்ந்து, அவரை ஆள் நடமாட்டமற்ற பாவற்கொடிச்சேனைப் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.


குளிர்பானத்தை அருந்திய சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்த அப்பெண், மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் நீரில் மூழ்கிக் கிடந்துள்ளார். "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் மேலே வானம் தெரிகிறது?" என்று ஆரம்பத்தில் குழப்பமடைந்த அவர், பின்னரே தான் கிணற்றுக்குள் வீசப்பட்டதை உணர்ந்து அலறியுள்ளார். தனது கணவர் மற்றும் தாயின் பெயரைச் சொல்லி கத்திய அவரது சத்தத்தைக் கேட்டு, அப்பகுதிக்கு வந்த சிலர் கயிற்றைப் போட்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர். இவரது 3 வயதுக் குழந்தை வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டாலும், அதே கிணற்றில் மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஒரு தம்பதியினர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"