BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை பிக்கு கைது: சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை பிக்கு கைது: சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் - நாவற்குழி விகாரையில் தங்கியிருந்த இளம் பிக்கு ஒருவர், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகாமையில் வசிக்கும் குறித்த சிறுமி, கடந்த சனிக்கிழமை (28.03.2026) விகாரை வளாகத்திலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் (Filter Water) பெறுவதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, விகாரைக்குப் புதிதாக வருகை தந்திருந்த இளம் பிக்கு அச்சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபரான பிக்குவைக் கைது செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவானின் இல்லத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"