BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மாயமான வயோதிபப் பெண் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மாயமான வயோதிபப் பெண் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில், நேற்று (29.03.2026) மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காடு ஒன்றிலிருந்து அவர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


குறித்த பெண் தனது வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய சிசிரிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனப் பிரதேச மக்கள் சந்தேகிக்கும் அதேவேளை, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற உண்மைத்தன்மையை அறிய கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் சோதனைகள் நடத்தப்பட்டு மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"