BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

சிலாபத்தில் வளைவில் மோதி விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் கார்!

சிலாபத்தில் வளைவில் மோதி விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் கார்!

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று, சிலாபம் - பண்டாரவத்தை வளைவுப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (29.03.2026) இரவு சுமார் 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதில் ஒன்றில் பலமாக மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காரின் முன்பகுதி மற்றும் மதில் ஆகியன பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்து நடந்த சமயம் காரில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்துள்ளார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் அவருக்குப் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் ஏற்பட்ட கவனக்குறைவு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்துச் சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"