யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு மற்றும் கேவில் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. இந்த யானைக்கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 36-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முழுமையாக நாசம் செய்துள்ளன. இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியும், இதுவரை எவரும் வந்து பார்வையிடவோ அல்லது நஷ்டஈடு வழங்கவோ இல்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
யானைகள் தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்திருந்தும், யானைகள் வந்த விபரத்தை அவர்கள் அறியவில்லை எனக் கூறுவது வியப்பாக உள்ளதாகப் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்டைக்காடு முதல் சுண்டிக்குளம் வரையான பகுதியைத் தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்களமே இந்த யானைகளைத் திட்டமிட்டு இப்பகுதிக்குள் கொண்டு வந்து விட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். யானைகளால் உயிர்ச்சேதங்கள் ஏற்படும் முன்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அழிவடைந்த தென்னைகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக