BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்து துணிகரக் கொள்ளை: பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!

லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்து துணிகரக் கொள்ளை: பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!

லண்டன், புஷி பகுதியில் உள்ள சில்டன் அவென்யூவில் (Silton Avenue) வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டில் கடந்த 18-ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட 20 நிமிடக் குறுகிய காலப்பகுதியில் இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறக் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்தித் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான பல தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி தமிழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து ஹேட்ஸ்மியர் (Hertsmere) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி சார்லோட் ஹார்ட்லி (Charlotte Hartley) தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நபர் ஒருவர் நடந்து சென்றது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறுவதை அவர் பார்த்திருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். எனவே, அந்த நபர் அல்லது இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைச் தொடர்பு கொள்ளுமாறு ஹேட்ஸ்மியர் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"