BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

எரிபொருள் விலை உயர்வு: முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வு: முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வின் தாக்கம் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரித்துள்ளன.

தற்போது ஒரு முட்டையின் விலை சுமார் 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன்படி, சிறிய முட்டை 37 ரூபாய், நடுத்தர முட்டை 39 ரூபாய் மற்றும் பெரிய (சிவப்பு) முட்டை 41 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையும் 100 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, ஒரு கிலோ கோழிக்கறி 1,200 முதல் 1,250 ரூபாய் வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு கோழி வளர்ப்பு துறையை கடுமையாக பாதித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோழிப் பண்ணைகளில் குஞ்சுகளை வெப்ப நிலையில் பராமரிக்க எரிவாயு பயன்படுத்தப்படுவதால் செலவுகள் அதிகரித்துள்ளன.

மேலும், டீசல் விலை உயர்வால் மீன்பிடி நடவடிக்கைகள் குறைதல், சந்தையில் மீன் கிடைப்பது குறைதல், பன்றி மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தி குறைதல் ஆகிய காரணங்களால் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு சுமார் 22,000 மெட்ரிக் டன் கோழி இறைச்சி தேவைப்படும் நிலையில், தினமும் சுமார் 700 மெட்ரிக் டன் மட்டுமே சந்தைக்கு வழங்கப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில், கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் விற்பனை துறை இலாபகரமானதாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"