BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

கொலம்பியாவில் கோர விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட பேர் பலி; பேர் படுகாயம்!

கொலம்பியாவில் கோர விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட பேர் பலி; பேர் படுகாயம்!

கொலம்பியாவின் அமேசானிய மாகாணமான புடுமாயோவில் அமைந்துள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோ (Puerto Leguízamo) நகரில் இருந்து திங்கட்கிழமை புறப்பட்ட ஹெர்குலஸ் சி-130 (Hercules C-130) ரக இராணுவ விமானம், சிறிது நேரத்திலேயே வயல்வெளி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 110 இராணுவ வீரர்கள் மற்றும் 11 பணியாளர்கள் என மொத்தம் 121 பேர் பயணித்துள்ளனர். இவ்விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்திய துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ், பலியானவர்களின் உடல்கள் உள்ளூர் வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 77 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நகரில் உள்ள இரண்டு முக்கிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளில், விமானம் வீழ்ந்த இடத்திலிருந்து கரும்புகை எழுவதும், மீட்புப் பணிகளுக்காக இராணுவ லொறிகள் விரைந்து செல்வதும் பதிவாகியுள்ளன. எக்குவாடோர் மற்றும் பெரு நாடுகளின் எல்லைக்கு அருகில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்துப் பாதுகாப்பு அமைச்சகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"