BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

மத்திய கிழக்கு போர்: பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதி!

மத்திய கிழக்கு போர்: பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதி!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் நீண்ட காலம் நீடித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே எச்சரித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) களனி பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.


உலகளாவிய ரீதியில் ஏற்படும் இத்தகைய மோதல்கள் ஒரு நாட்டை மட்டும் பாதிக்காது, மாறாக முழு உலக சமூகத்தையும் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தத் தவிர்க்க முடியாத சூழலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ச்சியான விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிவித்தார். போரினால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கையாள அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இருப்பதாகவும், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் மேலும் உறுதியளித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"