BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ஈரானின் இடைவிடாத தாக்குதல்கள் வளைகுடா நாடுகளை அதிர வைத்தன

ஈரானின் இடைவிடாத தாக்குதல்கள் வளைகுடா நாடுகளை அதிர வைத்தன

ஈரானின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்பட்ட பின்னர், ஈரான் இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டு வளைகுடாவில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியா, கட்டார், குவைட் போன்ற வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் கடந்த நாளில் தீவிரமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இதனால், வளைகுடா நாடுகளை நேரடியாக போருக்கு இழுக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஒரே நாளில் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் தாக்கப்பட்டதால், சர்வதேச மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்த ஈரான், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்ததால், உலகளாவிய விநியோக சங்கிலியில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க எண்ணெய் ஏற்றுமதியை செங்கடல் வழியாக மாற்றினாலும், செங்கடல் துறைமுக நகரான யான்புவில் உள்ள சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையமும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானது. ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி வந்த 6 ட்ரோன்களை சவுதி அரேபியா இடைமறித்து அழித்தது.

கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிலையமான ராஸ் லஃப்பான் மீதான ஏவுகணை தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் எரிவாயு விநியோகம் சில ஆண்டுகளாக சீராக நிலைக்காது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"