BREAKING
இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: திருமணமாகி இரண்டே மாதங்களில் உயிரிழந்த சகோதரி - அண்ணனும் பலி!

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: திருமணமாகி இரண்டே மாதங்களில் உயிரிழந்த சகோதரி - அண்ணனும் பலி!

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர வீதி விபத்து முழு மாவட்டத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனும், அவரது 19 வயதுடைய சகோதரியும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் தாக்கம் காரணமாக அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த 19 வயதுடைய யுவதிக்கு திருமணமாகி வெறும் இரண்டு மாதங்களே ஆன நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை உறவினர்களிடையே பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக பவுசர் சாரதியைக் கைது செய்துள்ள யாழ்ப்பாணப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் பொலிஸ் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், இச்சம்பவம் வீதிப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"