BREAKING
சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த 15 வயது சிறுமி ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு ; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் சஜித்துக்கு மனோ கணேசன் கடிதம் AI மூலம் போலிப் புகைப்படம் ; விமல் வீரவன்சவுக்கு சதுரங்க அபேசிங்க கடும் கண்டனம் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த 15 வயது சிறுமி ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு ; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் சஜித்துக்கு மனோ கணேசன் கடிதம் AI மூலம் போலிப் புகைப்படம் ; விமல் வீரவன்சவுக்கு சதுரங்க அபேசிங்க கடும் கண்டனம் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து அண்ணன், தங்கை பலி

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து அண்ணன், தங்கை பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியை அண்மித்த இடத்தில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் அவரது 19 வயது சகோதரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"