BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

சர்ச்சைகளுக்கு மத்தியில் ரகசியத் திருமணம்: காதலியைக் கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் ரகசியத் திருமணம்: காதலியைக் கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் (Yash Dayal), தனது நீண்ட கால காதலியும் பிரபல சமூக வலைதளக் கன்டென்ட் கிரியேட்டருமான ஸ்வேதா பண்டிரை (Shweta Pundir) ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் சக கிரிக்கெட் வீரர்கள் யாரும் கலந்துகொண்டதாகத் தகவல் இல்லை. யாஷ் தயாளின் மனைவியான ஸ்வேதா பண்டிர், இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவர் என்பதுடன், லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடவுள்ள யாஷ் தயாள், தற்போது கடுமையான சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரிலும், 2023-ல் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதி தொடர்பான புகாரின் பேரிலும் அவர் மீது இரண்டு வெவ்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஜெய்ப்பூர் வழக்கில் அவருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியிலேயே இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஜாமீன் கிடைத்ததை ஸ்வேதா தனது சமூக வலைதள பக்கத்தில் கொண்டாடியிருந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"