BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

எரிபொருள் நெருக்கடி: ' நாள் வேலை வாரம்' தொடர்பாக ஜனாதிபதி இன்று முக்கிய முடிவு!

எரிபொருள் நெருக்கடி: ' நாள் வேலை வாரம்' தொடர்பாக ஜனாதிபதி இன்று முக்கிய முடிவு!

உலகளாவிய மசகு எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடங்கல்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, இலங்கையில் நான்கு நாள் வேலை வாரத்தை (4-day work week) அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தீர்க்கமான ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசாங்கத் துறைத் தலைவர்களுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, அத்தியாவசிய சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்கான எரிபொருள் விநியோகத் திட்டங்கள் மற்றும் நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான வேலைத்திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வளைகுடாப் போர் சூழலால் எரிபொருள் விலை பேரல் ஒன்றுக்கு 100 டொலரைத் தாண்டியுள்ள நிலையில், போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இன்றைய கூட்டத்தின் முடிவில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"