BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

மஞ்சள் போர்வை போர்த்திய நுவரெலியா பூத்துக் குலுங்கும் இலவு மரங்கள்

மஞ்சள் போர்வை போர்த்திய நுவரெலியா பூத்துக் குலுங்கும் இலவு மரங்கள்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள புஸ்ஸல்லாவ பகுதியில் தற்போது மஞ்சள் இலவு மரங்கள் பூத்துக் குலுங்கி அழகிய காட்சியை வழங்கி வருகின்றன.

இந்த இயற்கை அழகைக் காண நாள்தோறும் பலர் அந்தப் பகுதிக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஞ்சள் இலவு மரம் என்பது கோடைக்காலத்தில் இலைகள் இல்லாமல், மரக்கிளைகள் முழுவதும் பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும் அழகிய மரமாகும்.

இந்த மரம் பிக்சேசி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பூக்கள் பெரியதாகவும் மென்மையான மஞ்சள் நிற இதழ்களுடனும் காணப்படுவதுடன், அதன் நடுப்பகுதியில் பல மகரந்தக் கம்பிகள் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்கள் வரை இந்த மரங்கள் அதிகமாக பூக்கும். இலைகள் உதிர்ந்த பின் மரம் முழுவதும் பூக்களால் மூடப்பட்டு மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும்.

இந்த மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டதுடன் செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரக்கூடியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த மரத்தின் பல பகுதிகள் மருத்துவ மூலிகைகளாக பயன்படுத்தப்படுவதுடன், அழகு மரமாகவும் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது.

பூக்கள் மலர்ந்த இந்த காலத்தில் நுவரெலியா பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்து இயற்கை அழகை ரசிக்க வரும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"