BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

புதுக்குடியிருப்பில் வீதியோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

புதுக்குடியிருப்பில் வீதியோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் பல முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதால் அப்பகுதி கடும் அசுத்தமான சூழ்நிலையாக மாறியதுடன் துர்நாற்றம் வீசும் நிலையும் உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குப்பைகளால் ஈர்க்கப்பட்ட யானைகள் கிராமப்பகுதிகளுக்குள் நுழையும் அபாய நிலையும் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரதேச சபையினர் குறித்த பகுதியை தொடர்ந்து சுத்தப்படுத்தி வந்தபோதிலும், மீண்டும் மீண்டும் வீதியோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததாக பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, அந்த இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை பிரதிகள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொது வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதை ஆதாரங்களுடன் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இதற்கான எச்சரிக்கை பதாகைகளும் குறித்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"