BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

விமான எரிபொருள் விலை உயர்வு விமான பயணச்சீட்டு விலையும் அதிகரிக்க வாய்ப்பு

விமான எரிபொருள் விலை உயர்வு விமான பயணச்சீட்டு விலையும் அதிகரிக்க வாய்ப்பு

உலகச் சந்தையில் விமான எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலை காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மேலாண் இயக்குனர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

அவரின் விளக்கத்தின் படி, கடந்த 27ஆம் திகதி ஒரு பேரல் விமான எரிபொருளின் விலை 93.57 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது அது 209 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக விமான சேவைகளின் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, விமான எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப உள்நாட்டில் விமான பயணச்சீட்டுகளின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

விமான எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் காரணமாக எதிர்காலத்தில் விமானப் பயணிகள் கூடுதல் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"