BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் ஆம் திகதி ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (12) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, புதைகுழியை சுற்றியுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கும் பொருட்களை வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் கடந்த டித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவற்றை அகற்றி புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளை முன்புபோல் நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதைகுழி பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன், சட்டத்தரணிகள் நிரஞ்சன் மற்றும் ரணித்தா உள்ளிட்டோர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அந்த நேரத்தில் புதைகுழி பகுதியில் இன்னும் நீர் தேங்கி இருப்பது கவனிக்கப்பட்டதால், எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கு ஏப்ரல் 08ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதுடன், அதன் பின்னர் ஏப்ரல் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"