BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை? சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் திருத்தம் கோரும் கனிமொழி எம்பி!

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை? சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் திருத்தம் கோரும் கனிமொழி எம்பி!

இந்தியாவில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பினால் இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கனிமொழி தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி, இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் தாயகம் திரும்பி குடியுரிமை பெற வழிவகை உள்ளது. அந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்கள் இன்னும் முழுமையாக இந்தியா திரும்பாத நிலையில், அந்த இடங்களுக்கு 'இந்திய வம்சாவளி தமிழர்கள்' என்ற பதத்துடன் 'இலங்கைத் தமிழர்கள்' எனும் பதத்தையும் உள்வாங்குவதன் மூலம் சட்டரீதியாகக் குடியுரிமை வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீண்டகாலமாக இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"