BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் இணைய சேவைக்கு பாதிப்பு அபாயம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் இணைய சேவைக்கு பாதிப்பு அபாயம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் செல்போன் வலையமைப்புகள் மற்றும் இணைய சேவைகள் விரைவில் பாதிக்கப்படக்கூடும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டு உபயோகத்திற்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுமே சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த தட்டுப்பாடு காரணமாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் சிலிண்டர் விநியோகம் எண்ணெய் நிறுவனங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை தயாரித்து நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் டவர் தயாரிப்பு படிப்படியாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு கோபுரங்களை தயாரிக்கும் போது உலோகங்களை சூடாக்கவும், கோபுரப் பகுதிகளை துரு மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாக்கும் பூச்சு செயல்முறைகளுக்கும் எரிவாயு அத்தியாவசியமாக பயன்படுகிறது.

இந்த நிலை தொடர்பாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான எல்பிஜி மற்றும் எல்என்ஜி எரிவாயு விநியோகத்தை சீராக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மின்வெட்டு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர்களின் மூலம் இயக்கப்படுகின்றன. கோடைக்காலம் நெருங்குவதால் மின்வெட்டு அபாயமும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, செல்போன் வலையமைப்புகள் மற்றும் இணைய சேவைகளை சீராக வழங்குவதில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

எனவே தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் விநியோகத்தையும் சீராக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"