ஈரானின் உயர் தலைவர் Ali Khamenei கொல்லப்பட்டார் என்பதை உலகிற்கு உறுதிப்படுத்திய பின்னர், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஒரே தாக்குதலில் 48 ஈரானிய தலைவர்களை அழித்ததாகக் கூறி பெருமையாகப் பேசியுள்ளார்.
தமது சமூக ஊடக தளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், அமெரிக்கப் படைகள் ஒன்பது ஈரானிய கடற்படைக் கப்பல்களை அழித்து மூழ்கடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சியிருக்கும் ஈரானிய கப்பல்களும் அமெரிக்காவின் குறிவைப்பில் உள்ளன என்றும், மிக விரைவில் அவையும் கடலின் அடியில் மூழ்கும் எனவும் Donald Trump தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் கடற்படை தலைமையகத்தின் பெரும்பகுதியை சிதைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், ஈரானின் கடற்படை துணிச்சலுடன் செயல்பட்டு வருவதாகவும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரானின் புதிய தலைமையுடன் தாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக Donald Trump அறிவித்துள்ளார். ஆனால், யார் தொடர்பு கொண்டார்கள், பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்பது குறித்து அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.
Fox News-க்கு வழங்கிய பேட்டியில், டசின் கணக்கான உயர்மட்ட ஈரானிய தலைவர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் குறிவைக்கப்பட்ட பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“Operation Epic Fury” எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கை வேகமாக முன்னேறி வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கிடையில், ஈரான் தலைவர்கள் தற்போது பேச்சுவார்த்தைக்கு தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்கு தாம் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சில அரபு கூட்டாளிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் Qatar, United Arab Emirates, Kuwait மற்றும் Bahrain ஆகிய நாடுகள் அடங்கும்.
மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் அணு ஆயுத விவகாரம் குறித்து பலமுறை கருத்து வெளியிட்டுள்ள Donald Trump, ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க முடியாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவங்கள் மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழ்நிலையை தீவிரப்படுத்தியுள்ளன; அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் தீவிர கவனிப்பில் உள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக