High Level Road, Pannipitiya பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக