BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி வயதுடையவர் பலி

மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி வயதுடையவர் பலி

கண்டி மஹியங்கனை – மெதஓயா பகுதியில் நேற்று (19.02.2026) மதியம் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மின்சார இணைப்பு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மின்சாரம் தாக்குதலால் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சட்டவிரோதமாக மின்சார கம்பிகளை அமைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மின்சார இணைப்புகள் பொதுமக்களின் உயிருக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"