BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் முக்கிய சட்டமூலங்கள் இன்று விவாதத்திற்கு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் முக்கிய சட்டமூலங்கள் இன்று விவாதத்திற்கு

இன்றைய (19.02.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் Jagath Wickramaratne தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30 மணிக்கு தொடங்கிய அமர்வுகள் மாலை 05.30 மணி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 09.30 மணி முதல் 10.00 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையிலான விதிகளின் படி நாடாளுமன்ற அலுவல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

காலை 11.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதமும், நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பும் நடைபெறவுள்ளது.

இதனுடன், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானத்தின் 235 ஆம் அத்தியாயம் அங்கீகரிக்கப்படவுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகளின் 203 ஆம் அத்தியாயமும் அங்கீகரிக்கப்பட உள்ளது.

மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையில் எழுப்பப்படும் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"