BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

சிவனொளிபாத மலை: பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலை: பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், சிவனொளிபாத மலையையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் என தெரிவித்தார்.

இதற்காக ஒரு விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம், யாத்திரிகர்கள் மலையில் கைவிடும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் முறையாக சேகரிக்கப்பட்டு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிவனொளிபாத மலையை பிளாஸ்டிக் மாசு தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"