BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை கோரி இன்று கடற்கரையில் போராட்டம்

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை கோரி இன்று கடற்கரையில் போராட்டம்

திருகோணமலை கடற்கரையோரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

இந்த வழக்கை முன்னிட்டு, திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியில் புத்தர் சிலையை நிறுவி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், சம்பந்தப்பட்ட கட்டுமானம் அமைந்துள்ளதாக கூறப்படும் திருகோணமலை பிரதான கடற்கரை பகுதிக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் திரளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பௌத்த தேரர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், குறித்த தேரர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் அல்லாது சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், பொதுச் சட்டத்தின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

இதனால், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக ரீதியாக கவனம் பெறும் நிலையில், இன்று நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையும் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"