BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

ஆண்டுகளுக்குப் பின்னர் நுவரெலியாவில் கடும் குளிர் ; ஆக பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை

ஆண்டுகளுக்குப் பின்னர் நுவரெலியாவில் கடும் குளிர் ; ஆக பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையில் இன்று (23) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா வானிலை நிலையத்தில் 5.0 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது. நேற்று அங்கு 3.0 பாகை செல்ஸியஸாக வெப்பநிலை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை ஏனைய பகுதிகளில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலைகளின்படி, பண்டாரவளையில் 12.5 பாகை செல்ஸியஸாகவும், பதுளையில் 14.8 பாகை செல்ஸியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், 25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றமாக, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் 3.5 பாகை செல்ஸியஸ் என்ற மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு குறைந்த வெப்பநிலை பதிவாகியது இதுவே முதல் தடவையாகும்.

இந்த கடும் குளிர் காரணமாக, நேற்று அதிகாலையில் நுவரெலியாவின் கிரெகரி ஏரி, ரேஸ்கோர்ஸ், கோல்ப் மைதானம், விக்டோரியா பூங்கா, காய்கறி வயல்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உறைபனி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், காற்றின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இவ்வாறு குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர். குறிப்பாக வடக்கிலிருந்து நாட்டிற்குள் நுழையும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று இதற்கான முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வானத்தில் மேகங்கள் இல்லாத நிலையில் பகலில் பூமி அதிகமாக வெப்பமடைந்து, இரவில் வேகமாக குளிர்ச்சியடைவதும் இந்த வெப்பநிலை மாற்றத்துக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் காற்றின் வடிவம் மாற்றமடையும் எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்று காரணமாக தற்போதைய குளிர்ச்சியான நிலைமை மாறக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"