BREAKING
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதல்; இருவர் உயிரிழப்பு 10 நாட்களில் ரூ.122 கோடி வசூல்! தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ படைத்த சாதனை மட்டக்களப்பில் ‘சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்’ மாநாடு; பல்வேறு தரப்பினர் பங்கேற்பு அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயது நபர் கைது வடக்கில் கட்டாக்காலி நாய்களுக்கு கட்டுப்பாடு; 7,606 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதல்; இருவர் உயிரிழப்பு 10 நாட்களில் ரூ.122 கோடி வசூல்! தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ படைத்த சாதனை மட்டக்களப்பில் ‘சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்’ மாநாடு; பல்வேறு தரப்பினர் பங்கேற்பு அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயது நபர் கைது வடக்கில் கட்டாக்காலி நாய்களுக்கு கட்டுப்பாடு; 7,606 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்

நாட்களில் ரூ. கோடி வசூல்! தமிழ்நாட்டில் ஜனநாயகன் படைத்த சாதனை

நாட்களில் ரூ. கோடி வசூல்! தமிழ்நாட்டில் ஜனநாயகன் படைத்த சாதனை

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனது அரசியல் பயணத்தின் காரணமாக ‘ஜனநாயகன்’ திரைப்படமே தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். இதனால் இப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியிருந்தனர்.

கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், அதன் வசூல் தொடர்ந்து சிறப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் வெளியாவதற்கு முன்பே திரைப்படம் இணையத்தில் கசிந்து, சுமார் 1.2 கோடி பேர் பார்த்ததாகக் கூறப்பட்ட நிலையிலும், திரையரங்க வசூலில் இப்படம் பெற்ற வரவேற்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் வெளியான 10 நாட்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சுமார் ரூ.275 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 10 நாட்களில் ரூ.122 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் தமிழ்நாட்டில் ரூ.150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்னதாக வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ படத்தின் வசூல் சாதனைகள் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகி வருகின்றன.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"