மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் 20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயாரின் கவனயீனம் ஏறாவூர் தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும், 2 மாதங்களை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான குழந்தை நித்திரையில் இருந்த பொழுது, தாயார் கிணற்றடியில் 20 லீற்றர் கொண்ட சுவர் பூச்சு வாளியில் உடைகளை கழுவிக் கொடியில் காய விரித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது, நித்திரையில் இருந்து எழுந்து அங்கு குழந்தை வந்ததையடுத்து அவரை குளிக்க வைப்பதற்காக குழந்தையின் ஆடைகளை எடுப்பதற்கு வீட்டின் அறைக்கு சென்று திரும்பிய பொழுது, குழந்தை அந்த நீர் நிறைந்த வாளிக்குள் குப்புறம் விழுந்தவாறு கிடந்துள்ளது.
வாளிக்குள் கிடந்த குழந்தை இதனைத் தொடர்ந்து, தாயார் மீட்கப்பட்ட குழந்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததையடுத்து, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாரருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக