BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக்

மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிற்றில், கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின், இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிறு திடீரென வீங்கியுள்ளது அத்தோடு அவ்வப்போது குழந்தை வாந்தி எடுத்துள்ளது.

பெற்றோர் சிகிச்சைக்காக, ராய்ச்சூர் மாவட்டத்தின் சிந்தனுாரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அங்குள்ள வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்தபோது, குழந்தையின் வயிற்றில் கட்டி போன்ற ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், குழந்தையின் வயிற்றில் இருப்பது கட்டியல்ல கரு என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த வைத்தியர் கூறியதாவது, கர்ப்பிணியின் வயிற்றில் உருவாகும் இரட்டை கருவில் ஒன்று மட்டும் நன்றாக வளர்ச்சி அடையும்.

மற்றொரு கரு வளராமல், வளர்ந்த கருவின் உடலுக்குள் சிக்கி கொள்ளும்.

இதுவே, 'பீடஸ் இன் பீடு' என, அழைக்கப்படுகிறது. 50 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற அபூர்வமான சூழ்நிலை ஏற்படுமென தெரிவித்துள்ளார்.

இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மற்ற பரிசோதனைகளின் முடிவுகளுக்குப் பிறகே, அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து முடிவு செய்யப்படுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் இது போன்ற சம்பவம் இடம்பெறுவது மூன்றாவது முறையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"