BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; ஐஸ் போதைப்பொருளுடன் வயது நபர் கைது

அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; ஐஸ் போதைப்பொருளுடன் வயது நபர் கைது

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில், இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (02) சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர் தங்கியிருந்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பிளாஸ்டிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் இலத்திரனியல் தராசு உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"