மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக