BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதல்; இருவர் உயிரிழப்பு

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதல்; இருவர் உயிரிழப்பு

கிரீஸில் பரவலாக எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதில், ஒரு ஹெலிகொப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதுடன் இரு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏதென்ஸுக்கு மேற்கே அமைந்துள்ள சதா (Psatha) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கிரீஸ் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில், மொத்தம் நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர்களில் ஒன்றில் பயணித்திருந்த கிரீஸ் மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இரு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொரு ஹெலிகொப்டரில் இருந்த பிரித்தானியா மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இரு பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, இரண்டு ஹெலிகொப்டர்களின் சுழலிறகுகள் (Rotors) நடுவானில் மோதியதைத் தொடர்ந்து, அவற்றில் ஒன்று வெடித்து தீப்பிடித்த நிலையில் தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

தற்போது ஐரோப்பாவின் பல பகுதிகள் கடுமையான வெப்ப அலை மற்றும் மழையின்மை காரணமாக காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை காலநிலை மாற்றம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் நோக்கில் கிரீஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"