BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு

எதிர்க்கட்சிகள் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும்,

மக்கள் விரும்பும் தருணத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகி

வீட்டிற்குச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும்

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (நாடாளுமன்றத்தில்) தெரிவித்தார்.

தாம்,

மக்களுக்கும்

தமது மனசாட்சிக்கும்

மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவர் எனக் குறிப்பிட்ட பிரதமர்,

இந்த நாட்டின் மக்கள் எப்போது பிரதமர் மாற்றம் வேண்டும் என்று

தீர்மானிக்கிறார்களோ,

அந்தத் தருணமே பதவியை விட்டு விலகத்

தாம் முழுமையாகத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை

எப்போது கொண்டு வரப் போகிறீர்கள்?

அதற்காகவே நான் காத்திருக்கிறேன்


என்று தெரிவித்த பிரதமர்,

அந்தப் பிரேரணை உண்மையிலேயே

திட்டமிட்டபடி கொண்டு வரப்படுமா இல்லையா

என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே,

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக

மேலோட்டமான அரசியல் விவாதங்களில் மட்டும்

எதிர்க்கட்சிகள் ஈடுபடாமல்,

முறையான ஆய்வுகளை மேற்கொண்டு

ஆழமான மற்றும் பயனுள்ள விவாதங்களில்

ஈடுபட வேண்டும்

எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"