BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

மட்டக்களப்பு ஏறாவூரில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் கெப்ரக வாகனம் மோதல்; இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் கெப்ரக வாகனம் மோதல்; இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்,

இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள்,

ஒரு கெப்ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்,

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில்,

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் பலத்த காயமடைந்து,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்,

மட்டக்களப்பு – ஏறாவூர் 01 மற்றும் குடியரசு பகுதிகளைச் சேர்ந்த

17 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசிர்,

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

விபத்தில் தொடர்புடைய கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"