BREAKING
குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்திக் கொலை? கல் குவியலுக்குள் மறைக்கப்பட்ட சடலம் மீட்பு; இருவர் விமான நிலையம் அருகே கைது

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்திக் கொலை? கல் குவியலுக்குள் மறைக்கப்பட்ட சடலம் மீட்பு; இருவர் விமான நிலையம் அருகே கைது

கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் குழுவுக்கிடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலைத் தொடர்ந்து, ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவரது சடலம் எஹலியகொடை – கரந்தனை காட்டுப்பகுதியில் கல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் சீனப் பிரஜைகள் மூவர் கொழும்பு கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிப்பதற்காக கெப் வாகனம் ஒன்றில் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, இரண்டு வாகனங்களில் அங்கு வந்த மற்றொரு சீனப் பிரஜைகள் குழுவினர் அவர்களைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது சீனப் பிரஜை ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய குழுவினர் தாங்கள் வந்த வேன் ஒன்றை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வேனில் இருந்து வாயு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக கரந்தனை – கேட்டுக்கடை பகுதியில் சென்ற எஹலியகொடை பொலிஸ் அதிகாரிகள் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான கல் குவியல் ஒன்றைக் கண்டுள்ளனர். அந்தக் கல் குவியலுக்குள் மனிதக் கையின் ஒரு பகுதி தென்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனித சடலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மீட்கப்பட்ட சடலம் துறைமுக நகரில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சீனப் பிரஜையினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்று மறைப்பதற்காக அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு சீனப் பிரஜைகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் சீனப் பிரஜைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்கான உண்மையான காரணம் இதுவரை முழுமையாக தெரியவரவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் சீனத் தூதரகமும் அவதானம் செலுத்தி வருவதாகவும், உண்மைகளை உறுதிப்படுத்த விரிவான விசாரணை நடத்துவதுடன், இலங்கையில் வசிக்கும் சீனக் குடிமக்களின் பாதுகாப்பையும் சட்டபூர்வமான உரிமைகளையும் உறுதி செய்யுமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"