2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (ஜனவரி 21) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளிலும் ஆரம்பமாகிறது. 'டித்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்காக வழங்கப்பட்ட நீண்ட விடுமுறைக்குப் பின்னர் இன்று பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்த இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை (முதலாம் தவணையின் 2-ம் கட்டம்).
2025-ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சைகள் நடைபெறவுள்ளதால், பெப்ரவரி 14 முதல் மார்ச் 02 வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும்.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத்திரம் பெப்ரவரி 14 முதல் மார்ச் 22 வரை நீண்ட விடுமுறை வழங்கப்படும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக