BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு

'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான 'தமிழா தமிழா' நிகழ்ச்சியின் இந்த வார முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. இவ்வாரம் "முறைப்பையன் – முறைப்பெண் உறவு" என்ற தலைப்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

நிகழ்ச்சியின் போது, பல போட்டியாளர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒரு போட்டியாளர், பல ஆண்டுகளுக்குப் பிறகு முறைப்பெண்ணை சந்தித்த அனுபவத்தை நகைச்சுவையாக விவரித்து அரங்கில் இருந்தவர்களை சிரிக்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு போட்டியாளர் தாம் வேறொரு பெண்ணை காதலித்து வந்தாலும், முறைப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த கருத்து நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கருத்தைக் கேட்ட நடுவர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, "நாளை உங்களுடைய தங்கைக்கு யாராவது இப்படிச் செய்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். இதனால் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழ்நிலை நிலவியதுடன், அரங்கில் விவாதமும் விறுவிறுப்பாக தொடர்ந்தது.

இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பார்வையாளர்களிடையே பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"