BREAKING
எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம் 2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய நிபந்தனை: மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம் 2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய நிபந்தனை: மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

காசாவிற்கான அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம்

காசாவிற்கான அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம்

அமெரிக்க தூதுவர் ஜாரெட் குஷ்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘அமைதி சபை’ மூலம் முன்வைக்கப்பட்டுள்ள காசாவிற்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டத்தில்,

உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் விலகாது என பிரதமர் நெதன்யாஹு தெரிவித்துள்ளதுடன், 15 அம்ச திட்டவரைவை பகிரங்கமாக நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்க நிர்வாகம் அதிருப்தியடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகளை மேலும் தாமதிக்காமல் திட்டத்தை இறுதி செய்வதற்காகவே ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, காசா அமைதித் திட்டத்தில் ஹமாஸ் தவிர்க்க முடியாத அரசியல் காரணியாக அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கான அறிகுறியாக இந்த நகர்வு இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"