ஜனநாயகக் கொங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2018–2020 காலப்பகுதியில் ஏற்பட்ட எபோலா பரவலின்போது பதிவான 2,299 உயிரிழப்புகளை விட அதிகமானதாகும். இதனால் தற்போதைய பரவல், கொங்கோவின் வரலாற்றில் மிக மோசமான எபோலா பேரழிவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மைய சுகாதார அறிக்கைகளின்படி, இதுவரை 4,945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 101 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது பரவி வரும் 'புண்டிக்புஜோ' ரக எபோலாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை இல்லாதது நிலைமையை மேலும் கவலைக்குரியதாக மாற்றியுள்ளது.
மேலும், நாட்டின் பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு, ஆயுத மோதல்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் 20 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நோய் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்தால், 2014–2016 மேற்கு ஆபிரிக்க எபோலா பேரழவையும் விஞ்சக்கூடிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக