BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

- கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்

- கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (17.08.2026) நடைபெற்ற திருவிழா நிகழ்வில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பல்வேறு கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், அப்பகுதியின் பாரம்பரிய கலைகள் மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் முயற்சியாகவும் இந்தத் திருவிழா அமைந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"