BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிளிநொச்சியில் பல கோடி ரூபாய் விவசாய நிதி மோசடி? - சி.ஐ.டி மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

கிளிநொச்சியில் பல கோடி ரூபாய் விவசாய நிதி மோசடி? - சி.ஐ.டி மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில போகங்களாக விவசாய அமைப்புகளினால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபாய் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பாரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு (FCID) மற்றும் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைப்புகள்: கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய கமநல சேவை நிலையங்களின் கீழ் இயங்கும் பின்வரும் அமைப்புகள் மீது இந்த ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன:

புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பு (கண்டாவளை).

மகிழங்காடு கமக்கார அமைப்பு (கிளிநொச்சி).

இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம்.

விசாரணையில் மந்தகதி: கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்த ஊழல்கள் குறித்து மாவட்ட செயலகம் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றிற்குப் பலமுறை அறிவித்தும், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தனிநபர்கள் சிலர் பொதுவான தீர்மானங்களின்றி தன்னிச்சையாக நிதியைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலை: நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் தேசிய கணக்காய்வு திணைக்கள (National Audit Office) அதிகாரிகள் கிளிநொச்சிக்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான விவசாயிகளின் வியர்வைத் துளிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"