BREAKING
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதல்; இருவர் உயிரிழப்பு 10 நாட்களில் ரூ.122 கோடி வசூல்! தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ படைத்த சாதனை மட்டக்களப்பில் ‘சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்’ மாநாடு; பல்வேறு தரப்பினர் பங்கேற்பு அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயது நபர் கைது வடக்கில் கட்டாக்காலி நாய்களுக்கு கட்டுப்பாடு; 7,606 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதல்; இருவர் உயிரிழப்பு 10 நாட்களில் ரூ.122 கோடி வசூல்! தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ படைத்த சாதனை மட்டக்களப்பில் ‘சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்’ மாநாடு; பல்வேறு தரப்பினர் பங்கேற்பு அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயது நபர் கைது வடக்கில் கட்டாக்காலி நாய்களுக்கு கட்டுப்பாடு; 7,606 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்

கறவை மாடு இறக்குமதி நிதி முறைகேடு விசாரணை: மகனுக்கு பதிலாக முன்னிலையான முன்னாள் அமைச்சர்

கறவை மாடு இறக்குமதி நிதி முறைகேடு விசாரணை: மகனுக்கு பதிலாக முன்னிலையான முன்னாள் அமைச்சர்

அவுஸ்திரேலியாவிலிருந்து கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட திட்டம் தொடர்பாக இடம்பெற்றதாகக் கூறப்படும் 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடு குறித்த விசாரணையின் போது, வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த தனது மகனுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

2012 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கறவை மாடு இறக்குமதி திட்டம் தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரின் மகன் கடந்த ஜூன் 15ஆம் திகதி விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்து, தனது மகனுக்குப் பதிலாக தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்.

ஆனால், சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரே விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என தெரிவித்து, அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சரின் மகன் பின்னர் அறிவிக்கப்படும் மற்றொரு திகதியில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கறவை மாடு இறக்குமதி திட்டம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய விஜித் விஜயமுனி சொய்சாவிடமும் கடந்த பெப்ரவரி மாதம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மேலும், அக்காலத்தில் கிராமிய பொருளாதார அமைச்சராக பதவி வகித்த பி. ஹரிசன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் முன்னாள் செயலாளரான ரேணுகா ஏகநாயக்க ஆகியோரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி முறைகேடு குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"